
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு தொடர்பாக சென்னை மற்றும் பொள்ளாச்சியில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களையோ, அடையாளங்களையோ வெளியிடக் கூடாது என்று வலியுறுத்தி நடத்தப்படும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.