தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா ஸ்டாலின்?: பாஜக கேள்வி 

தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா ஸ்டாலின்? என்று பாரதிய ஜனதா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா ஸ்டாலின்?: பாஜக கேள்வி 

சென்னை: தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா ஸ்டாலின்? என்று பாரதிய ஜனதா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இளைஞர்களின் (15-24) எண்ணிக்கை சுமார். 1 கோடியே 25 லட்சம். இதில் 60 விழுக்காடு இளைஞர்கள் பணியில் இருப்பவர்கள். 97 விழுக்காடு இளைஞர்கள் கல்வியறிவு உள்ளவர்கள். இவர்களில் 1 கோடி பேருக்கு சாலை பணியாளர்கள் வேலை கொடுப்பேன் என்று ஸ்டாலின் அவர்கள் சொல்வதை, தி மு க ஆட்சிக்கு வந்தால் ஏற்கனவே பணியில் உள்ள இளைஞர்கள் வேலையை இழப்பார்கள் என்பதாக எடுத்து கொள்ளலாமா? உற்பத்தி துறை முடங்கும், சேவை துறைகள் ஒழிக்கப்படும், அரசு வேளையில் இளைஞர்களுக்கு இடமில்லை என்று பொருள் கொள்ளலாமா? தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஸ்டாலின் கொடுத்துள்ளார் என எடுத்துக்கொள்ளலாமா? திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்தை வளர்க்கமுடியாது என்று பொருள் கொள்ளலாமா? 

ஆக மொத்தம், தி மு க தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், தமிழகம் அழிவுப்பாதையில் பயணிக்கும் என்பதை ஸ்டாலின் அவர்களின் அறிக்கை உணர்த்துகிறது. இளைய தலைமுறையினரின் வளர்ச்சி திட்டங்களிலில்லாத தி முகவிற்கு தமிழக இளைஞர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com