குழந்தைகளுடன் உள்ள பெண் கைதிகளுக்கு முதல் வகுப்பு: சிறைத்துறை டிஜிபி உத்தரவு

சிறையில் குழந்தைகளுடன் உள்ள பெண் கைதிகளுக்கு முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளுக்கு தமிழக சிறைத் துறை இயக்குநர் (டிஜிபி) அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டார்.

தமிழக சிறைகளில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வேலூர் மத்திய சிறையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இம்முகாமை வியாழக்கிழமை பார்வையிட்ட அசுதோஷ் சுக்லா, பெண் காவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியது:
சிறையில் குழந்தைகளுடன் உள்ள பெண் கைதிகளுக்கு முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும். குழந்தைகளுக்கென தொலைக்காட்சியில் கார்ட்டூன் காட்சிகள் ஒளிபரப்புவதுடன் விளையாட்டு உபகரணங்கள், சைக்கிள் ஆகியவையும் வழங்க வேண்டும். குறிப்பாக, பெண் கைதிகளுக்கு மன அழுத்தம் இல்லாமல் குடும்பச் சூழலில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். மாதந்தோறும் ஒவ்வொருவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com