தங்கம் பவுனுக்கு ரூ.144 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.144 உயர்ந்து, ரூ.24,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.144 உயர்ந்து, ரூ.24,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.3,020-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராமுக்கு 10 பைசா உயர்ந்து, ரூ.40.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.40,400 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,020.00
1 பவுன் தங்கம்     24,160.00
1 கிராம் வெள்ளி     40.40
1 கிலோ வெள்ளி      40,400.00
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,002.00
1 பவுன் தங்கம்     24,016.00
1 கிராம் வெள்ளி     40.30
1 கிலோ வெள்ளி     40,300.00

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com