இப்பதான் அடிவயித்துல ஒரு சூடு பரவுது போல?: ஸ்டாலினை கலாய்த்த எஸ்.வி.சேகர் 

இப்பதான் அடிவயித்துல ஒரு சூடு பரவுது போல? என்று கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி சர்ச்சையாகப் பேசிய விவகாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் எஸ்.வி.சேகர் கிண்டல் செய்துள்ளார்.
இப்பதான் அடிவயித்துல ஒரு சூடு பரவுது போல?: ஸ்டாலினை கலாய்த்த எஸ்.வி.சேகர் 

சென்னை: இப்பதான் அடிவயித்துல ஒரு சூடு பரவுது போல? என்று கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி சர்ச்சையாகப் பேசிய விவகாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் எஸ்.வி.சேகர் கிண்டல் செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்துக் கடவுளான கிருஷ்ணரை பொள்ளாச்சி சமபவத்தோடு ஒப்பிட்டுப் பேசிய விடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்க்குரல் எழுப்பினர். அத்துடன் வீரமணி பங்கேற்ற திராவிடர் கழகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத சிலர் கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.

அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின், “கி.வீரமணி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சு அல்ல அது. திராவிடர் கழகத் தலைமை அலுவலகமான பெரியார் திடலில் பேசியது. அதுவும் கிருஷ்ணரைக் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி பேசவில்லை. சில உதாரணங்களுடன் பேசியிருக்கிறார். அதனை, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளும், சில ஊடகங்களும் தவறான பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல செய்திருக்கும் சதி இது. அது உண்மை இல்லை. அப்படி, உண்மையாக இருந்திருந்தால் அது தவறுதான் என்பது என்னுடைய கருத்து” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்பதான் அடிவயித்துல ஒரு சூடு பரவுது போல? என்று கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி சர்ச்சையாகப் பேசிய விவகாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் எஸ்.வி.சேகர் கிண்டல் செய்துள்ளார்.

அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான ஒரு பதிவை ரீட்வீட் செய்து  கூறியுள்ளதாவது:

இப்பதான் அடிவயித்துல ஒரு சூடு பரவுது போல. 18-ம் தேதி ஒரு பாரதப்போர் ஆரம்பம்.  தீயவர்கள் அழியும் காலம் நெருங்கி விட்டது. COUNTDOWN STARTS.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com