லட்சுமி விலாஸ் வங்கியை இந்தியாபுல்ஸ் நிறுவனத்துடன் இணைக்க எதிர்ப்பு

லட்சுமி விலாஸ் வங்கியை இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
லட்சுமி விலாஸ் வங்கியை இந்தியாபுல்ஸ் நிறுவனத்துடன் இணைக்க எதிர்ப்பு

லட்சுமி விலாஸ் வங்கியை இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: லட்சுமி விலாஸ் வங்கியின் நிதிநிலை குறித்த தகவல்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த வங்கியின் மொத்த வாராக் கடன் ரூ. 3,400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, கடந்த நிதியாண்டின் மூன்று காலாண்டுகளில் ரூ.630 கோடி நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில், அந்த வங்கியை இந்தியாபுல்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கு அதன் வாரியக் கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
  லட்சுமி விலாஸ் வங்கி தனியாருக்குச் சொந்தமானது என்ற போதிலும், அதில் சாமானிய மக்களின் டெபாசிட் தொகை ரூ.30 ஆயிரம் கோடி உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, அந்த வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைக்க முன்வர வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com