சுடச்சுட

  
  iob


  கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து, திருத்தப்பட்ட வட்டி விகிதம் அடங்கிய பட்டியலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. 
  இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மத்திய அலுவலக முதன்மை மேலாளர் (சென்னை) ஏ.செந்தில்நாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
  ஓராண்டு மற்றும் அதற்கும் கூடுதலான காலத்திற்கு ஐந்து அடிப்படைப் புள்ளிகள் என்ற அளவில், கடன்களுக்கான வட்டி விகிதத்தை 10.4.19 முதல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைக் கால கொள்கை நடைமுறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிடும் வகையில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வட்டி விகித குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது. 
  திருத்தப்பட்ட பட்டியல் 
  கால அளவு     வட்டி  விகிதம்
  15 நாள்கள்    8.15% 
  ஒரு மாதம்    8.30 % 
  3 மாதங்கள்    8.45 %
  6 மாதங்கள்    8.50 %
  ஓராண்டு    8.65 %
  2 ஆண்டுகள்    8.75 %
  3 ஆண்டுகள்    8.85 %
  இவ்வாறு கடன்களுக்கான குறைக்கப்பட்ட வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai