
வாக்குச்சாவடிகள் முன்பு விளம்பரப் பலகை வைக்கக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வாக்குக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என வாக்குச்சாவடிகள் முன்பு விளம்பரப் பலகை வைக்கக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது பணப்பட்டுவாடாவை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிமன்றம் பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.