
பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்து மகிழ்ச்சியளிக்கிறது என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்
இல. கணேசன்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள வந்த அவர் நாகர்கோவிலில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை இழந்துவிட்டது. இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும். தன்னை கொல்ல சதி நடப்பதாக ராகுல் மலிவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு ஆதரவான அம்சங்களை கொண்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது.
ஸ்டாலின் தமிழகத்தின் ராகுலாக செயல்பட்டு வருகிறார். ஸ்டாலினின் பேச்சுக்கள் பண்பில்லாதவை, போலித்தனமானவை. தற்போது கண்ணியம் என்பது பிரசாரத்தில் இல்லாமலே போய்விட்டது.
பாஜக தேர்தல் அறிக்கை குறித்த ரஜினியின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.