திருத்தணியில் தாய், மகன் கொலை: கொள்ளையடிக்க முயன்று கொலையாளியான பக்கத்து வீட்டு இளைஞர் கைது

திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
திருத்தணியில் தாய், மகன் கொலை: கொள்ளையடிக்க முயன்று கொலையாளியான பக்கத்து வீட்டு இளைஞர் கைது

திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 

திருத்தணி ஒன்றியம், வள்ளியம்மாபுரம் ஊராட்சிக்குள்பட்ட பெருமாள் தாங்கல் புதூர், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் (45). தனியார் தொழிற்சாலையில் தலைமைக் காவலாளியாக பணிபுரிகிறார். 

கடந்த திங்கள்கிழமை அதிகாலை பெருமாளின் மனைவி வீரலட்சுமி (40), மகன் போத்திராஜ் (10) ஆகியோர் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். வீட்டில் இருந்த 27 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

திருத்தணி குற்றப்பிரிவு ஆய்வாளர் கீர்த்திகா தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, பெருமாள் வீட்டின் அருகே வசிக்கும் பால் வியாபாரம் செய்து வரும் வெங்கட் (25) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், திங்கள்கிழமை காலை பெருமாள் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக வெங்கட் முகமூடி அணிந்து சென்றுள்ளார். அப்போது வீட்டின் வெளியே வீரலட்சுமி கோலம் போட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் நுழைந்த வெங்கட் விளக்கை அணைத்துள்ளார். 

வீட்டில் மர்ம நபர் இருப்பதைக் கண்ட வீரலட்சுமி கூச்சல் போட்டுவிடுவாரோ என்ற பயந்த வெங்கட் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்றுள்ளார். மேலும், அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை வெங்கட் கொள்ளையடித்துள்ளார். 

அப்போது பெருமாளின் மகன் போத்திராஜ், தனது தந்தைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்க முயன்றுள்ளார். அதைப் பார்த்த வெங்கட், போத்திராஜின் கழுத்தை மின் வயரால் இறுக்கிக் கொன்று விட்டு, நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

பால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் அதிகமானது. கடனை அடைக்க பக்கத்து வீட்டில் நகைகளைக் கொள்ளையடிக்க திட்டமிட்ட வெங்கட்தான் கொலையாளி என்பதை காவல்துறையினர் கொலை நடந்து ஓரிரு நாட்களில் கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்துக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com