பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு திட்டத்தை வரவேற்ற ரஜினிக்கு நன்றி: பியூஷ் கோயல்

பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற நதிகள் இணைப்பு திட்டத்தை வரவேற்ற ரஜினிக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
பாஜக-அதிமுக கூட்டணி வலுவான கூட்டணி. தமிழக மக்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவளிப்பர் என உறுதியாக நம்புகிறோம். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர். 

அடுத்த அமையவுள்ள அரசில் தமிழக மக்களின் பங்களிப்பு இருக்கும். பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற நதிகள் இணைப்பு திட்டத்தை வரவேற்ற ரஜினிக்கு நன்றி. விவசாயிகள், மக்கள் நலனுக்காக ரஜினி கூறிய கருத்துகளை வரவேற்கிறேன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தமிழக ஆளுநரின் கையில்தான் உள்ளது. 

நீட் தேர்தவு தேவையில்லை என அதிமுக கூறவில்லை. நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டோம். 2022-ம் ஆண்டில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாகும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com