சுடச்சுட

  

  பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் ரூ.14 கோடி பறிமுதல்

  By ANI  |   Published on : 13th April 2019 11:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  psk_raid

   

  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து ரூ.14 கோடி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நேரத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர், வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பலகோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. 

  இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தனியார் கட்டுமானத்துறை நிறுவனமான பிஎஸ்கே இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

  அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 14.54 கோடி பணம் வருமானவரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai