Enable Javscript for better performance
மோடி மீண்டும் பிரதமரானால் புதுச்சேரிக்கு பேராபத்து: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மோடி மீண்டும் பிரதமரானால் புதுச்சேரிக்கு பேராபத்து: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

    By DIN  |   Published On : 13th April 2019 07:28 PM  |   Last Updated : 13th April 2019 07:28 PM  |  அ+அ அ-  |  

    vn


    புதுச்சேரி: மோடி மீண்டும் பிரதமரானால் மோடி வெற்றி பெற்றால் அது புதுச்சேரிக்கு பேராபத்தாக மாறும் என்று புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

    புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வெ.வைத்திலிங்கத்தை ஆதரித்து, லாசுப்பேட்டை பேரவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது முதல்வர் நாராயணசாமி பேசுகையில், 

    மத்தியில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் ஒன்றைக்கூட அவா் செய்யவில்லை. மோடி ஆட்சியில் மக்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நாடு முழுவதும் ரூ.71,000 கோடிக்கு விவசாயக்கடன் ரத்து செய்யப்பட்டன. ஆனால், மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துள்ளனர். 

    ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து ரூபாய் மதிப்பு இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் இந்திய பொருளாதாரத்தை படுபாதாளத்திற்கு தள்ளினார் மோடி. ஜிஎஸ்டி வரி கொண்டுவரப்பட்டதால் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

     ஜிஎஸ்டி வரி விதிப்பு குளறுபடியால் லட்சக்கணக்கான தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. நாடு முழுவதும் 6 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இப்படிப்பட்ட அவலநிலையை மோடி உருவாக்கியுள்ளார். 

    புதுச்சேரிக்கு மோடி எந்த நன்மையும் செய்யவில்லை. எந்த திட்டங்களையும் மோடி கொண்டுவரவில்லை. இதை நான் கேட்டால் ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்கு மோடி தொல்லை கொடுக்கிறார். 

    யார் பிரதமராக வந்தால் புதுச்சேரிக்கு நல்லது கிடைக்கும் என்பதை எண்ணி மக்கள் வாக்களிக்க வேண்டும்.

     காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை, நீட் தோ்வு ரத்து, ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000, மீனவர்களுக்கு தனி அமைச்சகம், நெசவாளா்களுக்கு வாழ்வாதார திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

       
    அனுபவமிக்க வைத்திலிங்கம் மக்களவைக்கு சென்றால் தான் புதுச்சேரிக்கு கூடுதல் திட்டங்களை பெற்று வர முடியும். 

    என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. மோடியை பிரதமராக்குவோம் என வாய்திறக்க மறுக்கின்றனர்.

    தலித்களுக்கு விரோதமானது பாஜக. தனிநபர் சுதந்திரங்களை பறித்த கட்சி அது.

     மோடி மீண்டும் பிரதமரானால் புதுச்சேரிக்கு பேராபத்து ஏற்படும். புதுச்சேரியின் வளா்ச்சிக்கு அதுவே தடைக்கல்லாக மாறிவிடும். ராகுல் காந்தி பிரதமரானால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனடியாக கிடைக்கும். புதுச்சேரி மிகப்பெரிய வளா்ச்சியை எட்டும் என்றார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp