சுடச்சுட

  

  அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன்

  By DIN  |   Published on : 15th April 2019 07:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  udhayakumar


  சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

  சென்னை சேப்பாகத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறையில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது. 

  பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, இந்த சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்தும் தகவல் எதுவும் இல்லை. 

  இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் நேற்று நடைபெற்ற சோதனை தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறையினர் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.  

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai