வாக்கு வங்கியும், கூட்டணி பலமும் வெற்றியைத் தேடித் தரும்

வாக்கு வங்கியும், கூட்டணி பலமும் வெற்றியைத் தேடித் தரும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
வாக்கு வங்கியும், கூட்டணி பலமும் வெற்றியைத் தேடித் தரும்

வாக்கு வங்கியும், கூட்டணி பலமும் வெற்றியைத் தேடித் தரும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
 சென்னை துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்திய பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
 தமிழ்ப் புத்தாண்டில் ஒவ்வொரு தமிழனுடைய நெஞ்சினிலும், தமிழினத்தை அழித்த துரோகிகள், தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம் மத்திய அரசுக்குத் தாரை வார்த்த நரகாசுர கூட்டணியை ஒழிப்பது தான், கடமையாக இருக்கும். அதற்கேற்ற வகையில் நரகாசுரர்களும், அரக்கர்களும், தலைதூக்காத வண்ணம் வருங்காலம் நிச்சயம் இருக்கும்.
 ஜனநாயகத்தில் அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அதிக நம்பிக்கை கொண்டுள்ளன.
 நாங்கள் எப்போதும் கொல்லைப்புற வழியைப் பின்பற்றுவது கிடையாது. பணத்தைக் கொண்டு அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்குக் கிடையாது.
 எங்களுக்கென்று கொள்கைகளும், திட்டங்களும் இருக்கின்றன. தேர்தல் அறிக்கை சிறப்பாக இருக்கிறது. எங்களுக்குக் கூட்டணி பலம் உள்ளது. வாக்கு வங்கி உள்ளது. பொதுமக்கள் முழுமையாக ஆதரவு தருகிறார்கள். இதுவே எங்கள் பலம் என்ற வகையில், எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது போன்று சித்து விளையாடுவது எங்களுக்குப் பழக்கம் இல்லை.
 40 உறுப்பினர்களின் குரல் மக்களவையில் ஒலிக்கும். தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும். திமுகவால் தாரைவார்க்கப்பட்ட உரிமைகளை எல்லாம் ஏற்கெனவே மீட்டெடுத்துள்ளோம். மீதியுள்ள உரிமைகளையும் மீட்டு எடுப்போம் என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com