சுடச்சுட

    

    கோடநாடு விவகாரம் குறித்து பழனிசாமியும் ஸ்டாலினும் பேசக் கூடாது: உயர் நீதிமன்றம்

    By DIN  |   Published on : 16th April 2019 02:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kodanadu


    சென்னை: கோடநாடு விவகாரம் குறித்து முதல்வரும், எதிக்கட்சித் தலைவரும் பேசக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் பேசக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.

    உதகை நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை இரு தரப்பினரும் கோடநாடு விவகாரம் குறித்துப் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் உள்ள எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai