Enable Javscript for better performance
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்

    By DIN  |   Published on : 16th April 2019 01:21 AM  |   அ+அ அ-   |    |  

    chandy

    தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான உம்மன்சாண்டி கூறினார்.
     கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமாரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மார்த்தாண்டம் அருகேயுள்ள சாங்கை காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த உம்மன்சாண்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
     மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 5 ஆண்டுகளாக மக்களுக்கு செய்த நெருக்கடிகளால், நாட்டில் ராகுல் காந்தி தலைமையில் மதச்சார்பற்ற அரசு அமையும். பிரதமர் மோடி கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை.
     கேரளத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தியின் கேள்விக்கு பிரதமரிடமிருந்து பதில் இல்லாத நிலையில், அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு வரிச் சலுகை அறிவித்தது புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளது. சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அரசு உச்சநீதிமன்றத்தில் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்து வருகிறது. அதேநேரத்தில், பாஜக தலைவர்கள் சபரிமலை விவகாரத்தில் நடித்துக் கொண்டுள்ளனர்.
     நாட்டின் ஒற்றுமை, ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும், இளைஞர்களும் ராகுல் காந்தியின் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, இந்தத் தேர்தலில் ராகுல் காந்தி பெரும் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக வருவார் என்றார் அவர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp