சுடச்சுட

  

  திமுகவுக்கு வாக்கு கேட்ட அதிமுகவின் நியூஸ் ஜெ டிவி... கொதிக்கும் அதிமுகவினர்! 

  By DIN  |   Published on : 16th April 2019 11:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  round


  திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு அதிமுகவின் நியூஸ் ஜெ டிவியில் வாக்கு கேட்டு திமுகவின் விளம்பரங்கள் இடம் பெற்றிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அதிமுகவினரியே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு இணையதளங்களில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு முன்னணி செய்தி இணையதளங்களில் திமுகவின் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.

  நடுநிலை ஊடகங்கள் மட்டுமல்லாது கட்சி சார்பான ஊடகங்களிலும் திமுகவின் இந்த விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அதிமுகவின் தொலைக்காட்சி என்று கூறப்படும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இணையதளத்தில் கூட திமுகவின் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது நியூஸ் ஜெ தொலைகாட்சியின் இணையதள பக்கத்திற்குச் சென்றால் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பேனர் நம்மை வரவேற்கிறது. இந்த சம்பவம் அதிமுகவினரியே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  அதிமுகவின் தொலைக்காட்சி என்று கூறப்படும் நியூஸ் ஜெ இணையதளத்தில் திமுக தரப்பு எப்படி விளம்பரம் செய்தது அதனை எப்படி அந்த தொலைக்காட்சி நிர்வாகம் அனுமதித்தது என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

  இதுகுறித்து விசாரித்தபோது தான் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் திமுக தரப்பு இந்த விளம்பரங்களை இணையதளங்களில் செய்து வருவது தெரியவந்துள்ளது. இணைய தளங்கள் என்று பொதுவாக திமுக தரப்பு கொடுத்த நிலையில் அரசியல் சார்புடைய அனைத்து இணைய தளங்களிலும் இந்த விளம்பரத்தை வெளியாகும்படி கூகுள் நிறுவனம் செய்துள்ளது. 

  ஆனால் விளம்பரங்களை பிளாக் செய்யும் வசதி இணையதளங்களுக்கு உண்டு என்றும் அந்த வசதியை பயன்படுத்தி திமுகவின் விளம்பரங்களை தடுப்பது நியூஸ் தொலைக்காட்சியில் நிர்வாகத்தின் தவறுதான் என்றும் சொல்லப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai