சுடச்சுட

  
  dmk,congress

  திமுக, காங்கிரஸ் கட்சிகளின் காட்சி விளம்பரங்களுக்குத் தடை விதிப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகார் மனுக்களை அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபுமுருகவேல் திங்கள்கிழமை அளித்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளின் தலா ஒரு காட்சி விளம்பரங்களுக்குத் தடை விதித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.
   அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபுமுருகவேல் அளித்த மனுவில், விவசாயி இறந்து போனது போன்று அவரின் உடலை வைத்து தேர்தல் விதிகளுக்கு மாறாக மக்களிடையே அச்ச உணர்வைத் தூண்டும் வகையில் காங்கிரஸ் காட்சி விளம்பரம் வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இதேபோன்று, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை அடையாளப்படுத்தும் வகையில் மதச் சின்னங்களை அணிந்த 3 நபர்கள் ஒருவரை ஒருவர் வன்மத்துடன் பார்ப்பது போன்று திமுக காட்சி விளம்பரம் வெளியிடுகிறது. இதற்கும் தடை விதிக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்களை ஏற்றுக் கொண்ட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, அதிமுக குறிப்பிட்ட இரண்டு விளம்பரங்களையும் காட்சி ஊடகங்கள் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
   அதிமுக விளம்பரங்களுக்கும் தடை: திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களைப் போன்றே அதிமுக வெளியிட்ட பிரசார விளம்பரங்களில் மூன்றுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நில அபகரிப்பு, இலங்கைத் தமிழர் பிரச்னை, சர்க்காரியா தொடர்பாக அதிமுக வெளியிட்ட விளம்பரங்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai