சுடச்சுட

  

  திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை

  By DIN  |   Published on : 16th April 2019 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Chandrababu_Naidu


  சென்னை: திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  ஆந்திரத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், பல இடங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்காளர்கள் 2 முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து வாக்களித்தனர். சில இடங்களில் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.

   வாக்குப்பதிவு இயந்திரம் இயங்காததால், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியே வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, பல மணி நேரமாகியும் வாக்குப்பதிவு தொடங்காத 618 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.

   அதுமட்டுமன்றி, வாக்குச்சாவடிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாதது, சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைந்து விட்டது. பல வாக்குச்சாவடிகளில் பெயரளவுக்கு ஊர்க்காவல் படையினரும், தன்னார்வலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால், வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து, ஒருவர் உயிரிழக்க நேரிட்டது.

   மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும். எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். 

  தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சனிக்கிழமை சந்தித்த சந்திரபாபு நாயுடு, அவரிடம் இதுதொடர்பாக புகார் மனுவை அளித்தார். 

  இ்ந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இன்று சென்னை அண்ணா அறிவாலயம் வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. 

  திருவாரூரில் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai