சுடச்சுட

  

  வேலூர் தேர்தல் குறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை: வருமான வரித்துறை விளக்கம்

  By DIN  |   Published on : 16th April 2019 04:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  duraimurugan it raid

  duraimurugan it raid


  சென்னை: வேலூர் மக்களவைத் தேர்தல் குறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

  வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை வைக்கப்பட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின.

  இந்த நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

  மேலும், எந்த தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்யுமாறு வருமான வரித்துறை தரப்பில் எப்போதும் பரிந்துரை முன் வைக்கப்படாது. வேலூர் தொகுதியில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனை குறித்து மட்டுமே அறிக்கை அனுப்பியுள்ளோம். 

  தேர்தலை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டியது தேரதல் ஆணையம்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai