8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வைப்போம்: அன்புமணி

சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் உள்ள பிரச்னையை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் எடுத்துக்கூறி அத்திட்டத்தைக் கைவிட வைப்போம் என்றார்

சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் உள்ள பிரச்னையை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் எடுத்துக்கூறி அத்திட்டத்தைக் கைவிட வைப்போம் என்றார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
 இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 சேலம் கூட்டத்தில் பேசிய நிதின்கட்கரி மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் என்ற அடிப்படையில்தான் 8 வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். தமிழக மக்களிடையே அந்த் திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பு நிலவி வருவதை அவர் உணர்ந்திருக்கவில்லை. அவர் கூறிவிட்டார் என்பதாலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிடாது.
 8 வழிச்சாலைத் திட்டம் குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும். அது அரசின் கடமை என்று முதல்வர் கூறியுள்ளார். மாநில அரசின் ஒத்துழைப்பும், ஆதரவும் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவது சாத்தியமல்ல. மேலும், 8 வழிச்சாலைத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கி அது தேவையில்லை என்பதை நிதின் கட்கரிக்கு புரிய வைப்போம்.
 வாணியம்பாடியிலிருந்து சேலம் செல்லும் 179ஏ எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் ரூ.515 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் 8 வழிச்சாலைக்கு தேவை இருக்காது என்பதை அமைச்சர் நிதின்கட்கரியிடம் எடுத்துக் கூறி அத்திட்டத்தைக் கைவிட வைப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com