முதல் தலைமுறை வாக்காளர்களே, உங்களால் வாக்குச்சாவடி முன்பு செல்ஃபி எடுக்க முடியாது!

ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதல் தலைமுறை வாக்காளர்களே, உங்களால் வாக்குச்சாவடி முன்பு செல்ஃபி எடுக்க முடியாது!


சென்னை: ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அன்றைய தினம் ஓட்டு போட்டுவிட்டு மை வைத்த விரலுடன் பலரும் தங்களது செல்ஃபியை பகிர்வது வழக்கம்தான். ஃபேஸ்புக்கும், வாட்ஸ் அப்பும் நிச்சயம் இந்த செல்ஃபிகளால் நிரம்பி வழியப் போகிறுது.

ஆனால் முதல் தலைமுறை வாக்காளர்களே உங்களுக்குத்தான் ஒரு வருத்தம் இருக்கும். ஆம், வாக்குச்சாவடி முன்பு நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள முடியாதே..

ஏன் என்று கேட்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம்..

முதல் முறையாக வாக்களிக்கப் போகும் முதல் தலைமுறை வாக்காளர்கள், எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறோம், எப்படி வாக்களிக்கப் போகிறோம் என்ற குழப்பத்தில் இருக்கலாம்.

முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதால் அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன்தான் இருப்பார்கள். அதே சமயம், வாக்களித்து விட்டு வந்ததும் தங்களது செல்ஃபிக்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.

செல்ஃபி என்று சொல்லும் போதுதான் முக்கியமான விஷயம் நினைவுக்கு வருகிறது. அதாவது வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதில் முக்கியமான விஷயம் வாக்குச்சாவடி முன்பு செல்ஃபி எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு செல்போன்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாக்களிக்கச் செல்லும் போது செல்போனை பத்திரமாக வீட்டிலேயே விட்டுவிட்டு செல்வது நன்மை பயக்கும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டுக்கு வந்து சாவகாசமாக மை தடவிய  விரலோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். பிறகென்ன?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com