சிறைத்துறை வரலாற்றில் முதல் முறை: கைதிகளை சந்தித்த நீதிபதிகள்

சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில், முதல் முறையாகக் குற்றம் செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை சந்தித்து நீதிபதிகள் அறிவுரை வழங்கிய நிகழ்ச்சி புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறைத்துறை வரலாற்றில் முதல் முறை: கைதிகளை சந்தித்த நீதிபதிகள்

சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில், முதல் முறையாகக் குற்றம் செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை சந்தித்து நீதிபதிகள் அறிவுரை வழங்கிய நிகழ்ச்சி புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 புழல் மத்திய சிறை மற்றும் விசாரணை சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முதல் முறையாக குற்றம் செய்து சிறைக்கு வந்துள்ள கைதிகளுக்கான கவுன்சிலிங் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தலைமையில் மாவட்ட நீதிபதி உட்பட 20-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

கவுன்சிலிங் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கைதிகள் பங்கேற்றனர். முதல் முறை குற்றச் செயலில் ஈடுபட்டு சிறைக்கு வந்துள்ள அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைமையிடத்து டிஐஜி கனகராஜ், டிஐஜி முருகேசன், சிறை அதிகாரி சண்முகசுந்தரம், மாதவரம் காவல் மாவட்டத் துணை ஆணையர் ரவளி பிரியாபுனேனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தண்டனை வழங்குவதோடு நீதிபதிகளின் கடமை முடிந்து விட்டது என்று விட்டுவிடாமல், முதல் முறையாகக் குற்றம் செய்து தண்டனை பெற்ற சிறைக் கைதிகள் தொடர் குற்றவாளிகளாக மாறாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழச் செய்யும் வகையில் சிறைத் துறை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டை செய்திருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com