சுடச்சுட

  

  தேனி இரட்டைக் கொலை: குற்றவாளிக்கு விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

  By DIN  |   Published on : 16th April 2019 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Supreme_Court


  புது தில்லி: தேனி இரட்டைக் கொலை வழக்கில்  குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

  வரும் 22ம் தேதி குற்றவாளி திவாகரனின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், குற்றவாளி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தூக்கு தண்டனையை ரத்து செய்ததோடு, மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

  தேனி மாவட்டத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு காதலர்களைக் கொன்றவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தூக்க தண்டனையை ரத்து செய்துள்ளது.

  தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுருளி அருவி பகுதியைச் சேர்ந்த காதலர்களான எழில்முதல்வன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணை செய்த சிபிசிஐடி போலீஸார், தேனி மாவட்டம், கருநாக்கன்நுத்தன்பட்டியைச் சேர்ந்த கட்டவெள்ளை என்ற திவாகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த இரட்டை கொலை வழக்கை விசாரித்த தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட திவாகருக்கு, தூக்குத் தண்டனை விதித்து கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. 

  இந்த தீர்ப்பை உறுதி செய்யக் கோரி, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம், உயர்நீதி மன்ற மதுரை கிளைக்கு அனுப்பியது. இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், காதலர்களை கொடூரமாகக் கொலை செய்த திவாகர், உயிருக்குப் போராடிய கஸ்தூரியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை, அரசு தரப்பு சாட்சியங்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளதாக கூறி வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை  ஒத்திவைத்திருந்தது. 

  இந்த நிலையில்,  நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திவாகருக்கு, தூக்குத்தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் சரியான தீர்ப்பை பிறப்பித்துள்ளது. இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கருணைக் காட்டக்கூடாது என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது. 

  அதே நேரத்தில், தூக்குத் தண்டனைக்கு எதிராகவும் பொதுமக்கள் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இந்த வழக்கைப் பொருத்தவரை குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இந்த நீதிமன்றமும் உறுதி செய்கிறது எனக்கூறி தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai