அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமானவரித் துறை அழைப்பாணை

சென்னையில் எம்.எல்.ஏ. விடுதியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக விசாரணை நடத்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமானவரித் துறை திங்கள்கிழமை அழைப்பாணை
அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமானவரித் துறை அழைப்பாணை

சென்னையில் எம்.எல்.ஏ. விடுதியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக விசாரணை நடத்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமானவரித் துறை திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதுகுறித்த விவரம்: மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
 இந்நிலையில், சேப்பாக்கத்தில் எம்.எல்.ஏ. விடுதியில் குறிப்பிட்ட சில அறைகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையத்துக்கு ரகசிய தகவல் ஞாயிற்றுக்கிழமை இரவு கிடைத்தது.
 இதையடுத்து வருமானவரித் துறையினரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அந்த விடுதியின் 10-ஆவது தளத்தில் உள்ள தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறை உள்ளிட்ட குறிப்பிட்ட சில அறைகளில் திடீர் சோதனை செய்தனர்.
 அமைச்சருக்கு அழைப்பாணை: சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக அமைச்சர் உதயகுமார் அறையில் இருந்து வாக்காளர் விவரங்கள் அடங்கிய துண்டுச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர்.
 இதன் அடுத்த கட்டமாக அமைச்சர் உதயகுமார் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட துண்டு சீட்டுகள் குறித்து விசாரணை செய்ய வருமானவரித் துறை முடிவு எடுத்தனர். இதற்காக உதயகுமாருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அத்துறையினர் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளனர். இந்த அழைப்பாணையை ஏற்று உதயகுமார், ஓரிரு நாள்களில் விசாரணைக்கு ஆஜராவார் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com