சுடச்சுட

  
  eps

  மகாவீரர் ஜயந்தியை ஒட்டி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
   அஹிம்சையே தர்மமாகும். எந்த உயிரையும் கொல்லாதே, எவரையும் சார்ந்திராதே, எவரையும் அடிமைப்படுத்தாதே என்பதே மகாவீரரின் கொள்கைகளாகும். மனிதவாழ்வு மேன்மையுற, பகவான் மாகவீரர் போதித்த அஹிம்சை, சத்தியம், திருடாமை, பற்றற்று இருத்தல் போன்ற உயரிய நெறிகளை மக்கள் கடைப்பிடித்து வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி அன்பு செழித்தோங்கும்.
   இனிய நாளில் மகாவீரரின் உயரிய போதனைகளை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி அன்பும், அறமும் நிறைந்த மகிழ்வான வாழ்வை வாழ்ந்திட வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai