சுடச்சுட

  

  வேலூர் தேர்தல்: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அவசர ஆலோசனை

  By DIN  |   Published on : 17th April 2019 12:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin

   

  வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை காலை அவசர ஆலோசனை நடைபெற்றது.

  வேலூரில் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுத. அப்போது சட்ட ரீதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர் வில்சன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர்.

  முன்னதாக, வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ரூ.11 கோடி அளவில் வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு, இதன்காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai