சுடச்சுட

  

  ஸ்டாலின் பொய்யான தகவல்களைப் பேசி வருகிறார்: அன்புமணி ராமதாஸ்

  By DIN  |   Published on : 17th April 2019 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pmk

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு தொடர்பாக நாள்தோறும் பொய்யான தகவல்களைப் பேசி வருகிறார் என்றார் அன்புமணி ராமதாஸ்.
   தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக. கூட்டணியில் பாமக சார்பில், அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர், செவ்வாய்க்கிழமை பாலக்கோட்டில் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்த பின், செய்தியாளர்களிடம் கூறியது:
   அதிமுக தலைமையிலான கூட்டணி விவசாயிகளின் கூட்டணி. திமுக தலைமையிலான கூட்டணி முதலாளிகளின் கூட்டணி. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாள்தோறும் தமிழக அரசு குறித்து பொய்யான தகவல்களைப் பேசி வருகிறார். 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக பேச ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை. இந்தத் திட்டத்தில் பாதித்த விவசாயிகளையும் திமுக சந்திக்கவில்லை. வழக்கும் தொடுக்கவும் இல்லை. ஆனால், தற்போது ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்று தடை உத்தரவைப் பெற்றோம். நீதிமன்ற உத்தரவை மதிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை விரைவில் சந்தித்து, 8- வழிச் சாலைத் திட்டம் குறித்துப் பேசி அதை நிறுத்த உள்ளோம். நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸும், திமுகவும் தான். நீட் தேர்வு தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பி, தமிழகத்துக்கு விலக்கு பெற்று அதைச் சட்டமாக்குவோம். ஸ்டெர்லைட் ஆலை, கச்சத்தீவு, காவிரி, மேக்கேதாட்டு அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்துக்கு துரோகம் செய்தது திமுக தான். எனவே, ஸ்டாலினுக்கு இத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவர் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai