சென்னை ஆவடி அருகே வாகன சோதனையில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் 

சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆவடி அருகே வாகன சோதனையில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் 

ஆவடி:  சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வியாழன் அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாகன சோதனைகள் தீவிரமாகத் தொடர்கிறது. அதேநேரத்தில்  தேர்தல் பறக்கும்படையும் தனது கண்காணிப்பை மேற்கொள்கிறது.

இந்நிலையில் சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்லபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் திருவள்ளுர் நெடுஞ்சாலையில் வந்த இரண்டு வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவற்றில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை 25 கிலோ எடை அளவில் மூட்டைகளாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தங்கமானது திருப்பதி தேவஸ்தானதிற்கு கொண்டு செல்லப்படுவதாக வேனில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் வேனில் எந்த விதமான பாதுகாப்பபு ஏற்பாடுகளோ அல்லது உரிய ஆவணங்களோ இல்லாத காரணத்தால், குறிப்பிட்ட வேனை பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து சோதனை நடத்தி, தற்போது காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுதொடபாக விசாரணை மேற்கொள்ளப்பட்டடு வருகிறது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com