இது புதுசு! நாம் அதாவது வாக்காளர்களின் நடத்தை  எப்படி இருக்கிறது? பார்க்கலாம் வாங்க

வாக்காளர் நடத்தை குறித்து தேர்தல் மறுசீரமைப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
இது புதுசு! நாம் அதாவது வாக்காளர்களின் நடத்தை  எப்படி இருக்கிறது? பார்க்கலாம் வாங்க


வாக்காளர் நடத்தை குறித்து தேர்தல் மறுசீரமைப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

வாக்காளர்களைப் பற்றி அறிந்து கொள்ள சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 
அதில் ஒரு சில கேள்விகள் இப்படி இருந்தன.

அதாவது,

  • ஒரு வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கக் காரணங்கள் என்ன?
  • ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பதில் யாருடைய கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள்?
  • ஒரு குற்ற வழக்கில் தொடர்புடையவர் மக்கள் பிரதிநிதியாக வேண்டுமா?
  • குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களிக்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி அதன் மூலம் வாக்காளர்களின் நடத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்
2018 ஆய்வின்படி, அதிகப்படியான மக்கள் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கும் போது அவர் சம்பந்தப்பட்ட கட்சி முக்கியமான காரணியாக உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் வேட்பாளரின் தரம். அதாவது அவரது நன்னடத்தையைக் கருத்தில் கொள்கிறார்கள்.

முதல்வர் அல்லது பிரதமர் யார் என்பதைப் பொறுத்து. இதுவும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது.

அடுத்து, பணம், பரிசு பொருட்கள் போன்றவையும் முக்கியமான காரணியாக உள்ளது.

72 சதவீத மக்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் கொடுப்பது சட்டவிரோதம் என்பது தெரிந்திருக்கிறது.

98% வாக்காளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக் கூடாது என்றே கருதுகிறார்கள்.

37% வாக்காளர்கள், குற்றப் பின்னணி இருந்தாலும், அவர் மற்றபடி நன்றாக செயல்படுவதையும் கருத்தில் கொள்ளலாம் என்கிறார்கள்.

ஒரு குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர் வெற்றி பெறக் காரணங்கள் என்று வாக்காளர்கள் சில காரணிகளை கூறுகிறார்.

அது என்னவென்றால், 

  • வேட்பாளர் செல்வாக்கானவர்
  • தன் சாதி, மதத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் 
  • தேர்தலில் தாராளமாக செலவழித்ததால்
  • போன்ற காரணிகளும் வாக்காளர்கள் வாக்களித்து அவர் வெற்றி பெறக் காரணமாக அமையலாம் என்கிறார்கள்.

இவையெல்லாம் வாக்காளர்கள், தேர்தலில் வாக்களிக்கும் போது ஒரு வேட்பாளரை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதற்கான சின்ன உதாரணம் மட்டுமே. இதுவே பொதுவான விதியல்ல.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com