தேர்தல் ரத்து அதிமுக கூட்டணி வேட்பாளர் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது: ஜெயகுமார்

துரைமுருகன் வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. உறவினருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.11.48 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 
தேர்தல் ரத்து அதிமுக கூட்டணி வேட்பாளர் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது: ஜெயகுமார்

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரது தந்தையும், திமுக பொருளாளருமான துரைமுருகன் மர்றும் அவரது உறவினர்கள் வீடு, பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர். 

துரைமுருகன் வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. உறவினருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.11.48 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், குறிப்பிட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மட்டுமே அதிமுக கோரியதாக அமைச்சர் டி.ஜெயகுமார் கூறினார். 

ஆனால், வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது, அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கருத்து கேட்காமல் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com