குடியாத்தத்தில் திமுக - பாமக இடையே மோதல்: மூவருக்கு காயம் 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திமுக - பாமக இடையே நடைபெற்ற தேர்தல் தொடர்பான மோதலில், மூவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
குடியாத்தத்தில் திமுக - பாமக இடையே மோதல்: மூவருக்கு காயம் 

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திமுக - பாமக இடையே நடைபெற்ற தேர்தல் தொடர்பான மோதலில், மூவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழன் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 3 மணி நிலவரப்படி 52.02% வாக்குகள் பதிவாகியுள்ளது

காலை வரை பெரும்பாலும் அமைதியாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவில், மதியத்திற்கு மேல் கொஞ்சம் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறத் துவங்கியுள்ளது.

முன்னதாக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் தொடர்பாக பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திமுக - பாமக இடையே நடைபெற்ற தேர்தல் தொடர்பான மோதலில், மூவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள கல்லூர் என்னும் இடத்தில் வாக்குச் சாவடிக்கு அருகே நின்று வாக்கு கேட்ட விவகாரத்தில், திமுக மற்றும் பாமக கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் ஆரணியில் அதிமுக மற்றும் திமுக இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரின் பற்கள் உடைக்கப்பட்டது.

ஆம்பூரில் அமமுக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com