அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் மோதல்: 20 வீடுகள் சேதம் 

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் மோதல்: 20 வீடுகள் சேதம் 

அரியலூர்: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அங்குள்ள அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் அரசுப் பள்ளியொன்றில் வியாழன் காலை துவங்கி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வந்தது.

மதியம் மூன்று மணியளவில் அங்கு வந்த பாமக கட்சிக்காரர்கள் சிலர் திருமாவளவனின் பானை சின்னத்தை போட்டு உடைத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இரு தரப்பினர் இடையே சண்டை மூண்டது.அதில் வி.சி.க தொண்டர் ஒருவரது மண்டை உடைக்கப்பட்டது.

அதற்கு எதிர்வினையாக பொன்பரப்பியில் சிலரது இரு சக்கரவாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து அங்கு நடைபெற்ற மோதலில் சுமார் 20 வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பதற்றத்தைக் குறைக்க காவல்துறை நாகு குவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com