வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் இல்லை: பாமக நிறுவனர் ராமதாஸ் புகார்

வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் இல்லை என்றும் அதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் இல்லை: பாமக நிறுவனர் ராமதாஸ் புகார்

சென்னை: வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் இல்லை என்றும் அதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழன் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் இல்லை என்றும் அதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று காலை அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது

திண்டிவனம் வாக்குச்சாவடியில் நான் வாக்களிக்கச் சென்ற போது  வாக்கு எந்திரம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை. வாக்களிக்க சிரமமாக இருந்தது. இன்னும் பல பகுதிகளில் இதேநிலை காணப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் 6 மணி நேரம் உள்ளது.  வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் கிடைக்க தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com