பேச்சிப்பாறையில் படகுகளில் வந்து வாக்களிக்கவுள்ள பழங்குடியினர்

குமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் அங்குள்ள பழங்குடியின மக்கள் படகுகளில் அணையைர் கடந்து வந்து வியாழக்கிழமை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.


குமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் அங்குள்ள பழங்குடியின மக்கள் படகுகளில் அணையைர் கடந்து வந்து வியாழக்கிழமை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
பேச்சிப்பாறை அணையின் மறுபுறம் உள்ள வனப்பகுதியில் தச்சமலை, தோட்டமலை, களப்பாறை, பின்னை மூட்டுத்தேரி, நடனம் பொற்றை, மாங்காமலை உள்ளிட்ட குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான காணி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான வாக்குச்சாவடி பேச்சிப்பாறை அரசு  மேல்நிலைப் பள்ளியில் உள்ளது. 
இந்த, வாக்குச்சாவடிக்கு பழங்குடியின வாக்காளர்கள் படகுகள் மூலம் மட்டுமே வரமுடியும். சாலை வழியாக வரமுடியாது. இதனால், அவர்கள் பேச்சிப்பாறை அணையில் இயக்கப்படும் தனியார் படகுகள் மூலம் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்துச் செல்கின்றனர். 
இவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உரிமைகள் சார்ந்த  பல்வேறு கோரிக்கைகள் இருந்தாலும், அவற்றை புறந்தள்ளி, ஒவ்வொரு தேர்தலின் போதும் உற்சாகமாக வந்து வாக்களித்துச் செல்வது இந்த மக்களின் வழக்கமாக உள்ளது.
 மக்களவைத் தேர்தலையொட்டி, வியாழக்கிழமை அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்குப் புறப்படும் பழங்குடி மக்கள், பெரும்பாலும் மதியத்திற்குள் வாக்களித்துவிட்டு தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்பிச் சென்றுவிடுவோம் என்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com