4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ஆம் தேதி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்

4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை மே 1ஆம் தேதி ஒட்டப்பிடாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். 
4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ஆம் தேதி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்

4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை மே 1ஆம் தேதி ஒட்டப்பிடாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். 

தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதன்படி,  மக்களவைத் தேர்தலின் 7-ஆவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மே 19-இல் இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை மே 1ஆம் தேதி ஒட்டப்பிடாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளார். முதற்கட்ட பிரசாரத்தை மே 1-ல் தொடங்கி 8-ஆம் தேதி அரவக்குறிச்சியில் அவர் நிறைவு செய்கிறார். மே 1,2 ஆகிய தேதிகளில் ஒட்டப்பிடாரம் தொகுதியிலும், மே 3,4 ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதியிலும் மே 5,6 ஆகிய தேதிகளில் சூலூர் தொகுதியிலும் மே 7,8 ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய இரு தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் துரைமுருகன், கனிமொழி, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சூலூர், அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளின் நிலவரம் குறித்து இன்று மாலையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com