4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாளை வேட்புமனு தொடக்கம்

தமிழகத்தில் காலியாகவுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல், திங்கள்கிழமை (ஏப். 22) தொடங்குகிறது. வாக்குப்பதிவு மே 19-இல்
4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாளை வேட்புமனு தொடக்கம்

தமிழகத்தில் காலியாகவுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல், திங்கள்கிழமை (ஏப். 22) தொடங்குகிறது. வாக்குப்பதிவு மே 19-இல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது.
மேலும் காலியாகவுள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், திங்கள்கிழமை (ஏப். 22) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 29-ஆம் தேதி கடைசி நாளாகும். ஏப். 30-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும்.
வாக்குப் பதிவு மே 19-ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அனைத்து நடைமுறைகளும் மே 27-இல் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள்: நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றாலும், அந்தத் தொகுதிகள் அமைந்துள்ள கோவை, மதுரை, கரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் முழுமைக்கும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சனிக்கிழமை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com