இலங்கை குண்டுவெடிப்பில் இருந்து இந்தியர்களை  மீட்டு வர நடவடிக்கை: மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் 

இலங்கையில் குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை  பாதுகாப்பாக மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்.. 
இலங்கை குண்டுவெடிப்பில் இருந்து இந்தியர்களை  மீட்டு வர நடவடிக்கை: மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் 

சென்னை: இலங்கையில் குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை  பாதுகாப்பாக மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் ஞாயிறன்று 7 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 130-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளார். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை  பாதுகாப்பாக மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இலங்கை கொழும்பில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் 137 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பை போதித்த  இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த  நாளில்  நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில்  அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பது  வேதனையளிக்கும் முரண்பாடு ஆகும். காயமடைந்த 500 பேருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை  பாதுகாப்பாக மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com