பொன்பரப்பியில் வீடுகள் சூறை: மார்க்சிஸ்ட் கண்டனம்

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் 20-க்கும் மேற்பட்ட தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் 20-க்கும் மேற்பட்ட தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் 20-க்கும் மேற்பட்ட தலித் மக்களின் வீடுகள் காவல்துறையின் முன்னிலையிலேயே அடித்து நொறுக்கப்பட்டுள்ளன, அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பானை சின்னத்தில் போட்டியிடுவதால், தோல்வி பயத்தால் பாமக மற்றும் இந்து முன்னணியினர் இணைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலித் மக்கள் வீடுகளை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தி உள்ளனர். இதில் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 20-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக பல வாக்குச்சாவடிகளில் பாமக மற்றும் பாஜகவினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, வாக்களிக்க வந்த மாற்றுக் கட்சியினரை மிரட்டியிருப்பது ஜனநாயகத்தைக் கேள்விக்குறியதாக்கியுள்ளது.
எனவே,  பொன்பரப்பியில் தலித் மக்களின் வீடுகளில் சூறையாடியவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com