கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம்

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
தேரில் எழுந்தருளிய கலியுக வரதராசப் பெருமாள் மற்றும் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி.
தேரில் எழுந்தருளிய கலியுக வரதராசப் பெருமாள் மற்றும் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி.

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தென்கலை அமைப்பைச் சேர்ந்ததுமான இக்கோயிலின் ஆண்டு பெருவிழா, ஸ்ரீராமநவமியன்று தொடங்கி 10 நாள் பெருந் திருவிழாவாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது.
கோயில் ஆதீனப் பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாட்சியார் குடும்பத்தினர் முன்னிலையில் உத்ஸவர் கலியுக வரதராசப் பெருமாள், தாயார் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து, ஒரு வாரமாக பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
தேரில் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் உத்ஸவர் எழுந்தருளி அருள்பாலித்தார். காலை 6 மணிக்கு புறப்பட்ட தேர் 8 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தது. மற்றொரு தேரில் ஆஞ்சநேயர் எழுந்தருளினார்.
விழாவில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, சென்னை மற்றும் பிற மாநில பக்தர்களும் வந்திருந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பக்தர்கள் மொட்டையடித்து பசு மற்றும் ஆடு,கோழி, நெல், நவதானியங்கள் ஆகியவற்றை தானமாக  வழங்கி நேர்த்திக் கடனையும் நிறைவேற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com