பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: நாளை முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும்  ஜூன் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள் செவ்வாய்,  புதன் ஆகிய இரு நாள்களில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்புக்கு, சிறப்பு துணை பொதுத் தேர்வு வரும்  ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.  இதில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள் ஏப். 8 முதல்  12 வரை  விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டது. இந்த காலத்தில் விண்ணப்பிக்காதவர்கள், தத்கல் முறையில் சிறப்புக் கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரு நாள்களில் அவரவர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். தனியார் பிரௌசிங் மையங்கள் வழியாக விண்ணப்பிக்க முடியாது. 
தத்கலில் விண்ணப்பிக்கத் தேர்வுக் கட்டணம் ரூ.125, சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500,  ஆன்லைன் கட்டணம் ரூ.50 என ரூ.675 அரசுத் துறை சேவை மையங்களில் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.  அரசு தேர்வுத் துறை சேவை மைய விவரங்களை 
மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசு பள்ளிகள் மற்றும், www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com