பொன்பரப்பி சம்பவம்: அறிக்கை தர உத்தரவு

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி
பொன்பரப்பி சம்பவம்: அறிக்கை தர உத்தரவு


சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில்   திங்கள்கிழமை  அவர்அளித்த பேட்டி:
தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. அன்றைய தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம், நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தன. இந்தப் பணியில் பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்புக் குழுவினரும் ஈடுபட்டு வந்தனர். சட்டப் பேரவை இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நான்கு தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள்  தொடர்ந்து அமலில்  இருக்கும். 
13 துணை ராணுவப் படை: இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நான்கு தொகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக 13 துணை ராணுவப் படையினர் வரும் 26-இல் அந்தந்த மாவட்டங்களுக்கு வரவுள்ளனர். வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. தேர்தலின் போது பணியில் இருந்த துணை ராணுவப் படையினர் தற்போது அண்டை மாநிலங்களில் உள்ள தேர்தல் பணிகளுக்குச் செல்லவுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்விரிவான அறிக்கைகள்: சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்தப் புகார் மனு தொடர்பாக, விரிவான அறிக்கை அளிக்க மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.இதேபோன்று, மதுரை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவின் போது பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள், அழியா மை ஆகியன தனியான அறையில் வைக்கப்பட்டிருந்தன. ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் உள்ள இணை தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி மதுரை சென்னை சென்று விசாரணை நடத்தியுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமைக்குள் அறிக்கையை அளிப்பார். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளின்படி பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யும்படி மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முழு நேரமும் முகவர்கள் இருக்கலாம்: வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே அங்கீகாரம் பெற்ற முகவர்கள் 24 மணி நேரமும் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
தமிழக அரசு செயல்படலாம்: வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதம் அவகாசம் உள்ளது. ஆனாலும், தமிழக அரசு தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்  என்றார்  சத்யபிரத சாகு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com