மத்தியப் பிரதேச தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்து உமாசங்கர் விடுவிப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மக்களவைத் தொகுதி தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்து, தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்து உமாசங்கர் விடுவிப்பு


மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மக்களவைத் தொகுதி தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்து, தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளி மாநிலங்களில் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர். அந்த வகையில், மக்களவைத் தேர்தல் பார்வையாளர்களாக 100-க்கும் மேற்பட்ட தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளி மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக உள்ள சி.உமாசங்கருக்கு மத்திய பிரதேச மாநிலம் சித்தி மக்களவைத் தொகுதி பார்வையாளர் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
அவர் தலைவலி காரணமாக, சித்தியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றார். அப்போது, அங்கியிருந்த நோயாளிகளுக்கு மத பிரசங்கத்தைச் செய்யத் தொடங்கியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.
இதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம், உமாசங்கரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியது. ஆனால், அவர் ஓய்வெடுக்கவில்லை. மத பிரசங்கம் மூலமாக நோயாளிகளை சுகப்படுத்துவதாக மருத்துவமனையில் செய்திகள் பரவியதால் அவரைச் சந்திக்க நோயாளிகள் பலரும் வந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி காந்த ராவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்து தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.உமாசங்கர் விடுவிக்கப்பட்டதாக காந்த ராவ் தெரிவித்துள்ளார். உமாசங்கருக்குப் பதிலாக ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகார் பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். 
தமிழகத்தில் இதுபோன்று பொது இடத்தில் மத பிரசங்கம் செய்து, ஏற்கெனவே மாநில அரசின் கடுமையான கண்டனத்துக்கு ஆளானவர் உமாசங்கர். தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com