அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் உயர்கிறது: அதுவும்?

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதுவும் 40% அளவுக்கு இருக்கும் என்கிறது ஆரூடம்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் உயர்கிறது: அதுவும்?

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதுவும் 40% அளவுக்கு இருக்கும் என்கிறது ஆரூடம்.

அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்புகளுக்கும், பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் வழங்கும் படிப்புக்கும்  வரும் கல்வி ஆண்டில் கல்விக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள சிண்டிகேட் அனுமதி அளித்திருப்பதாகவும், இது குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் பல்கலையின் துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார். 

ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிக்கும் நோக்குடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கல்விக் கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

உறுப்புக் கல்லூரிகளில் கல்விக்கட்டணத்தை உயர்த்துவதற்காக துணைவேந்தர் சூரப்பா சில காரணங்களையும் அளித்துள்ளார். அதாவது அண்ணா பல்கலைக்கழக பணியாளர்களுக்கு ஊதியம் தர நிதி தேவைப்படுவதாலும், பல்கலையின் செலவுகளை சமாளிக்கவும் தான் கல்விக் கட்டணம் உயர்த்தப்படுவதாகக் கூறியுள்ளார். 

அதே சமயம், மிக அதிக அளவில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது, ஏழை மாணவர்களாலும் தாங்கிக் கொள்ளும் வகையிலேயே கல்விக் கட்டணம் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் தகவல் அறிந்த வட்டாரங்களோ, கல்விக் கட்டண உயர்வு என்பது தற்போதைய கட்டணத்தில் 35 - 40 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக கல்விக் கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கல்லூரிகளின் கட்டமைப்பு உட்பட பல விஷயங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் காரணம் கூறப்படுகிறது.

கல்விக் கட்டண உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கண்டனத்தை நேற்று பதிவு செய்திருந்தார்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 13 உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளோ, ஆய்வகங்களோ இல்லை. பெரும்பாலான உறுப்புக் கல்லூரிகளில் மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக பேராசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வியின் தரம் அண்ணா பல்கலைக்கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் வழங்கப்படும் கல்வியின் தரத்தில் 10 விழுக்காடு கூட இல்லை. அவ்வாறு இருக்கும் போது கட்டணத்தை உயர்த்துவது நியாயம் அல்ல.

தமிழக அரசுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரிகளில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்வித் தரத்திலும், கட்டமைப்பு வசதிகளிலும் அரசு கல்லூரிகளுடனும், அண்ணா பல்கலைக்கழகத்துடனும் ஒப்பிட முடியாத உறுப்புக் கல்லூரிகளில் ரூ.30,000-க்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே அதிகம் எனும் நிலையில், இந்தக் கட்டணத்தையும் உயர்த்தப் போவதாக துணைவேந்தர் அறிவித்திருப்பது மிகப்பெரிய அநீதி ஆகும். இது மாணவர்களை பாதிக்கும்.

உறுப்புக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் குறைந்தது 10% உயர்த்தப்படுவதாக வைத்துக் கொண்டால்  கூட, ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். ஊரக, ஏழை, எளிய மாணவர்களால் இந்தக் கட்டண உயர்வை சமாளிக்க முடியாது. அத்தகைய சூழலில் அவர்கள் பொறியியல் படிப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலைக்கு அவர்களை சூரப்பா தள்ளக்கூடாது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசும், தமிழக அரசும் தாராளமாக மானியம் வழங்குகின்றன. உறுப்புக் கல்லூரிகளை நடத்துவதில் நிதிநெருக்கடி இருந்தால் அது குறித்து அரசிடம் தெரிவித்து தேவையான நிதியைப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com