குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை இரவு மழை பெய்ததைத் தொடர்ந்து  பேரருவி மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து விழுந்ததால், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து
குற்றாலம் பேரருவியில் விழும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்.
குற்றாலம் பேரருவியில் விழும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை இரவு மழை பெய்ததைத் தொடர்ந்து  பேரருவி மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து விழுந்ததால், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 

இதையடுத்து, குற்றாலம் பேரருவியில் நள்ளிரவில் அதிகளவில் தண்ணீர் கொட்டியது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் பேரருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தண்ணீர்வரத்து சற்று குறைந்ததையடுத்து, குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

மேலும், பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியிலும் தண்ணீர் கொட்டியதால், அங்கும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். 

கோடைகாலத்தில் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதையடுத்து, சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com