சிவகார்த்திகேயன் அளித்த வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சிவகார்த்திகேயன் அளித்த வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா? என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் சத்யபிரத சாகு விளக்கமளித்துள்ளார். 
சிவகார்த்திகேயன் அளித்த வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சிவகார்த்திகேயன் அளித்த வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா? என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் சத்யபிரத சாகு விளக்கமளித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர். இவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர் ஆவார். ஆனால், தேர்தல் அதிகாரிகளுடன் பேசியதை அடுத்து, சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார். விதிமீறி வாக்களித்திருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாதபோது ஒருவாக்கை மட்டும் எண்ணாமல் விட முடியாது. வெற்றி, தோல்வி குறித்து முடிவுகள் வெளியாகும்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பின்பற்றப்படும். 

சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளோம். நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்தும்படி அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தது போல் வீடியோ உள்ளதால் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் மே 23-ஆம் தேதி வரை தலா ஒரு பறக்கும் படை செயல்படும்.

தேர்தல் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை விவகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று அறிக்கை அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com