வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவான தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது: பாலச்சந்திரன்

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவான தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவான தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது: பாலச்சந்திரன்


சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவான தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு தற்பொழுது வலுவான தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது.

டென்மார்க் ஒட்டியப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் வலுவான தாழ்வுப் பகுதி அடுத்து வரும் 24 மணி நேரத்தில் அதாவது 26ம் தேதி இரவு தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது, 27, 28ம் தேதிகளில் புயலாக வலுப்பெற்று தற்போதைய நிலவரப்படி வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.

எனவே மீனவர்கள் 25 மற்றும் 26ம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கும், 27, 28ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல்  பகுதிக்கும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com