ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கு: ஜூன் 6-ஆம் தேதி இறுதி விசாரணை

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரி புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, 1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளது எனவும், 2005-06 முதல் 2011-12 வரை ரூ.6.62 கோடி ஜெயலலிதாவுக்கு வருமான வரி பாக்கி உள்ளது எனவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டது. இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 6-ஆம் தேதி நடத்தப்படும் எனக் கூறிய நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com