நடிகர் ஸ்ரீகாந்த் விதிகளை மீறி வாக்களித்துள்ளார்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

நடிகர் ஸ்ரீகாந்த் விதிகளை மீறி வாக்களித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 
நடிகர் ஸ்ரீகாந்த் விதிகளை மீறி வாக்களித்துள்ளார்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

நடிகர் ஸ்ரீகாந்த் விதிகளை மீறி வாக்களித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில், மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள் பலர் வாக்களித்தனர். நடிகர் சிவகார்த்திகேயன், காந்த், ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. அதேசயம், நடிகர் சிவகார்த்திகேயன், காந்த் இருவர் மட்டும் வாக்குச்சாவடி அலுவலரிடம் சிறப்பு அனுமதி பெற்று வாக்களித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குப்பதிவு செய்தது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று தெரிவித்தார். மேலும் விதியை மீறி நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும், அவரது வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். 

இதுகுறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
சிவகார்த்திகேயன் போன்று நடிகர் ஸ்ரீகாந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் விதியை மீறி வாக்களித்துள்ளார் என அறிக்கை பெறப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் பெயர் நீக்கப்பட்டது பற்றியும் விசாரிக்கப்படும். நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் 100% தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை விவகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com